Wednesday, July 14, 2010

கவிதைகள்

என்னவளே!!!!!!!!!!
--------------------
என்னவளே நீ என்றும் நன்றாக இருக்க வேண்டும் .....நான்...

என்றும் உன் நினைவாக.... இறக்க வேண்டும் ...

-----------------------------------------------------------


ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்
----------------------------------------------------------------
ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்
நெஞ்சு பூப்பூத்தாலும் பூக்கட்டும்
கடும் தீப்பிடித்தாலும் பிடிக்கட்டும்
ஒரு புன்னகை செய் ஒரே புன்னகை செய்
உயிர் வாழ்வதாயினும் வாழட்டும்
இல்லை சாவதாயினும் சாகட்டும்

படம் : 12B
கவிஞர் : வைரமுத்து
பாடியவர் : ஹாரிஸ் ஜெயராஜ்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
-------------------------------



அவளின் விழிகள் ...
வாழ்க்கையின் வழியா?......இல்லை
இதயத்தின் வலியா?


அன்பே உன் புன்னகை ...........
என் வாழ்வின் நம்பிக்கை ....





படித்ததில் பிடித்தது ----- காதலின் புது இலக்கணம்

யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் கொடுத்து "அட்டு பிகரை அழகான பிகராக்கி", வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்...அறியாத வயசு புரியாத மனசு...!

- நவீன காதலன்



நதிகள்
------
மலையில் ஜனனம் ...
நடுவில் பயணம் ....
கடலில் மரணம் ....
மனதில் ஏன் ? ....சலனம் ...
பங்கிட்டுக்கொள்ள ...




சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன் யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!






வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !




சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !








சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?



மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?





சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
எழுதியவர் பெயர் தெரியாது
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::