Monday, October 25, 2010

கண் தானம் செய்வோம் !!!!!





கண் தானம்

ஒருவர் இறந்த பின்பு அவருடைய கண்களைத் தானம் செய்தால் அந்தக் கண்களைக் கொண்டு பிறருக்குப் பார்வை அளிக்க முடியும் என்பதால் கண் தானம் செய்யும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தக் கண் தானம் செய்ய விரும்புபவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது கண் மருத்துவமனைகளை அணுகினால் அதற்கான விளக்கம் கிடைக்கிறது.

"மண்ணில் புதைப்பதை விட பிறர் கண்ணில் விதைப்போம்"



கண் வங்கி என்றால் என்ன?

விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்கு கண் தானம் அளிப்பவர்களின் கண்களை மதிப்பிட்டு பார்வையில்லாதோருக்கு தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே கண் வங்கி. மாற்றுக் கண் பொறுத்தப்படுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மருத்துவ அளவுகோல்களின் பரிசோதனைகளின்படி தானம் செய்யப்பட்ட கண்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது. தானமாக வரும் கண்கள் அனைத்தும் விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இருக்காது, எனவே அவைகள் ஆய்வு மற்றும் கண் கல்விக்கு பயன்படுத்தப்படும்.

கண்தானம் ஏன் செய்ய வேண்டும்?

விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வையற்றோரில் 90 சதவீதத்தினருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. பிறவியிலேயே விழிவெண்படல நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண் பொருத்தப்படுவதன் மூலம் பார்வை கிடைத்துள்ளது.

யார் கண்தானம் செய்ய முடியும்?

வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. மந்தமான கண் பார்வையோ, வயதோ வித்யாசத்தை ஏற்படுத்தாது. தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்ணை தானம் செய்வது புனிதமான செயல். ஆனால் நண்பர்களோ, உறவினர்களோ உங்களது இந்த புனித ஆசையை நிறைவேற்ற வேண்டும். கண்ணாடி போட்டுக் கொள்பவர்கள், காடராக்ட் செய்து கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு உடையவர்கள் என்று அனைவரும் கண் தானம் செய்யலாம். ஆனால் மாற்றுக் கண் பொருத்தும் அறுவை சிகிச்சை, தானம் செய்யப்பட்ட கண்களை தீவிரமாக பரிசோதித்த பிறகே பயன்படுத்தப்படும்

No comments:

Post a Comment